• Download mobile app
24 Jan 2026, SaturdayEdition - 3636
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வையில் மாணவர்கள் பங்கு அதிகளவில் இருக்க வேண்டும் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

January 24, 2026 தண்டோரா குழு

கோவை நவக்கரையில் அமைந்துள்ள ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்கல்வியில் நற்பணியாற்றிய சிறந்த ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் பள்ளிகளை அங்கீகரிக்கும் வகையில் மறைந்த விஞ்ஞானி. டாக்டர். ஆர்.எஸ்.லால் மோகன் அவர்கள் நினைவாக தேசிய அளவிலான ஏஜேகே சிறந்த கல்வியாளர் விருதுகள் மற்றும் நூல் வெளியீட்டு விழா ஏஜேகே கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

ஏஜேகே கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் செயலர் பேரா.முனைவர்.அஜீத் குமார் லால் மோகன் தலைமையுரையாற்றினார்.

அவர் தம் உரையில்,

தன்னுடைய அப்பா மறைந்த விஞ்ஞானி டாக்டர். ஆர்.எஸ்.லால் மோகன் அவர்கள் மேற்கொண்ட கடலுயிர் ஆய்வுகள், 21000 விஞ்ஞான வெளியீடுகளின் சாதனை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தில் அவர் மேற்கொண்ட டால்பின் , கடல்பசு, திமிங்கலம் போன்ற கடலுயிர் ஆய்வுகள் , இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய, அறக்கட்டளையின் வாயிலாக மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் பணிகள், புதிய மீன் இனங்கள் கண்டுபிடிப்பு ஒரு புதிய மீன் இனம் “Lalmohania velutina”” இவரது பெயரிலேயே அறிவிக்கப்பட்டது.

1960–70 காலகட்டத்தில், தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மண்டபம் கடற்கரைப் பகுதியில் கடற்பசு குறித்த இந்தியாவின் முதல் நீண்டகால அறிவியல் ஆய்வை மேற்கொண்டவிதம் போன்றவற்றை பெருமிதத்துடன் நினைவுக்கூர்ந்தார். விஞ்ஞானி டாக்டர். ஆர்.எஸ்.லால் மோகன் அவர்கள் நினைவாக சிறந்த ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் முதல்வர்களுக்கு எமது கல்லூரி விருது வழங்குவதை பெருமிதத்துடன் எடுத்துரைத்தார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ தலைவர் டாக்டர்.வி.நாராயணன் பங்குபெற்று சிறப்புரையாற்றினார்.

ந்த நிகழ்வில் உரையாற்றிய டாக்டர் வி.நாராயணன்,

ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாகம்,ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டி வாழ்த்திப்பேசினார்.இந்தக் கல்லூரி சிறந்த ஆசிரியர்களையும்,பள்ளிகளையும் மற்றும் முதல்வர்களையும் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவித்து விருது வழங்குவது பாராட்டத்தக்கது என்றார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் பல்வேறு துறைகளில் குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றில் இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை விரிவாக எடுத்துரைத்தார்.

ஒரு வளரும் நாடான இந்தியா இன்று செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் முக்கிய இடத்தில் உள்ளது என்று குறிப்பிட்டார். செயற்கைக்கோள் ஏவுதல், உள்நாட்டு கண்டுபிடிப்புகள், மேம்பட்ட விண்வெளி பயணங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியா உலகளவில் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியா பொருளாதார வளர்ச்சியில் உலகளவில் 4வது முக்கிய இடத்தில் உள்ளது. ரயில்வேதுறையும் அதிகளவில் வளர்ந்துள்ளது. இந்தியாவில் எழுத்தறிவு 12 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்திய மக்களின் ஆயுள் நாள்கள் சராசரியாக 72 சதவிகிதம் வயது வரை உயர்ந்துள்ளது.

இன்றைய இந்தியா, சந்திராயன் போன்ற செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவி, விண்வெளி பயன்பாடுகளில் முன்னணியில் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த 100 வது ஆண்டான 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வையில் மாணவர்கள் பங்கு அதிகளவில் இருக்க வேண்டும் என்றார்.

ஒரு இலக்கை அடைய வேண்டுமென்றால் ஒழுக்கம், தியாகம், உறுதி, தன்னம்பிக்கை, நல்ல எண்ணங்கள் வேண்டும் என்று பேசினார்.

மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் கல்வியில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது என்றார். அனைத்து வேலைகளிலும் அனைவரும் சமம் என்ற கருத்தையும் இங்கு பதிவிட்டார். பெண் குழந்தைகள்; படித்தால் மொத்த குடும்பமும் முன்னேறும். பெண் கல்வி மிகவும் இன்றியமையாதது என்றார்.

தொடர்ந்து, விஞ்ஞானி. டாக்டர். ஆர்.எஸ்.லால் மோகன் அவர்களின் “ஒரு கடல்வாழ் உயிரின விஞ்ஞானியின் வாழ்வியல் சித்திரம்” என்ற புத்தகத்தை டாக்டர்.வி.நாராயணன் வெளியிட ஏஜேகே கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் செயலர் பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன் பெற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து கடல்பசு என்ற புத்தகத்தை டாக்டர். ஜோ கே. கிழக்கூடன், முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) விசாகப்பட்டினம் ஆராய்ச்சி மையம் வெளியிட ஏஜேகே கல்வி நிறுவனங்களின் இயக்குநர் பேராசிரியர் பிந்து அஜித் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து டாக்டர். வி.நாராயணன்,தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா பாண்டிச்சேரி போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுத்த 200க்கும் மேற்பட்ட சிறந்த ஆசிரியர்கள், சிறந்த பள்ளி, சிறந்த முதல்வர்களுக்கு சான்றிதழும் கோப்பையும் வழங்கி சிறப்பித்தார்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற டாக்டர். ஜோ கே.கிழக்கூடன்,முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர்,மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) விசாகப்பட்டினம் ஆராய்ச்சி மையம் அவர்கள் மறைந்த விஞ்ஞானி டாக்டர்.ஆர்.எஸ்.லால் மோகன் அவர்களின் கடல் வாழ் உயிரின டால்பின் ஆய்வுகளைப்பற்றியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு லால் மோகனின் முன்னெடுப்புகளையும் பாராட்டிப்பேசினார். மறைந்த விஞ்ஞானி டாக்டர். ஆர்.எஸ்.லால் மோகன் அவர்களின் தமிழ்நாட்டில் மண்டபம் கேம்ப், மற்றும் குஜராத்தில் மேற்கொண்ட டால்பின் ஆய்வுகளைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன் என்றார்.

ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜீ வரவேற்புரை வழங்கினார்.இவ்விருது வழங்கும் விழாவில் பல்வேறு பள்ளிகளைச்சார்ந்த ஆசிரியர்கள், முதல்வர்கள், பள்ளிகள் நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க