• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியா வருகிறார் உலகில் நம்பர் 1 இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்

March 23, 2018 தண்டோரா குழு

இன்சப்ஷென், மெமன்ட்டோ, தி பிரஸ்டீஜ், பேட்மேன் பிகின்ஸ், இந்த ஆண்டு ஆஸ்கரில் 3 விருதுகளை வென்ற டன்கிர்க் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கிறிஸ்டோபர் நோலன்.

உலகில் நம்பர் ஒன் இயக்குனராக கருதப்படும் இவர் முதல் முறையாக் இந்தியா வரவுள்ளார்.மும்பை டாடா தியேட்டரில் மார்ச் 31ம் தேதி  நடக்கும் டிஜிட்டல் சினிமாவின் எதிர்காலம் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முக்கிய இயக்குனர்கள், நடிகர்கள் கிறிஸ்டோபர் நோலனுடன் கலந்துரையாடல் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

இதில் நோலனுடன் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ஆமிர்கான், ஷாருக்கான், இயக்குனர்கள் ஷியாம் பெனகல், மணிரத்னம், அனுராக் கஷ்யப், பர்ஹான் அக்தர் உள்பட பலர்பங்கேற்கிறார்கள். அவர்களுடன் நோலன் கலந்துரையாடி கேள்விகளும் கேட்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க