March 10, 2018
தண்டோரா குழு
அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் மேக்ரனை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.
நான்கு நாள் அரசு முறைப்பயணமாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரன் இந்தியா வந்துள்ளார். மனைவி பிரிஜட் மேரி கிளாடி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவுடன் நேற்று இரவு டெல்லி வந்த அவரை, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.
பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரன், பிரதமர் நரேந்திர மோடி இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
பிரான்ஸ் அதிபராக பதவியேற்ற பின் இம்மானுவேல் மெக்ரான் முதன் முறையாக இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது