• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் !

October 4, 2018 தண்டோரா குழு

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

டில்லியில் நடைபெறும் இந்தியா -ரஷ்யா 19-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். இதற்காக இந்தியா வருகை தந்துள்ள விளாதிமிர் புதினை டெல்லி விமான நிலையத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேரில் சென்று வரவேற்றார். புதின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்கவுள்ளார். அப்போது இரு நாட்டுத் தலைவர்களிடையே 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன.

மேலும், ரஷ்யாவிடம் இருந்து 36 ஆயிரத்து 792 கோடி ரூபாய் மதிப்பீட்டில், எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தமும் அப்போது கையெழுத்தாகிறது. ரஷ்யாவுடன் இந்தியா மேற்கொள்ளும் இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், இந்தியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க