March 22, 2018
தண்டோரா குழு
இந்தியா – மலேசியா இளைஞர் பரிமாற்றுத்திட்டத்தில் சிறப்பாக பங்களித்த ஸ்ரீ கோபால்நாயுடு பள்ளிக்கும், மாணவர்களுக்கும் மலேசியாவின் கல்வி அமைச்சர் பரிசுகளையும், விருதுகளையும், பாராட்டுப் பத்திரங்களையும் அளித்து கௌரவித்தார்கள்.அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இன்று (22.3.2018) பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில், பள்ளியின் தாளாளர் மற்றும் செயலர் ஜி.கே. விஜயகுமார்,பள்ளி நிர்வாக அலுவலர் டி. பிரேமா, தலைமையாசிரியர் டி. தேவராஜன், ஸ்ரீ கோபால்நாயுடு குழந்தைகள் பள்ளி முதல்வர் வித்யா மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.
இந்தியா மலேசியா மாணவர் பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் இணையதளத்தில் விண்ணப்பித்துத் தேர்வு பெற்ற ஸ்ரீ கோபால்நாயுடு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நவீன்,ரோஹித்,அங்கம்மாள், சுருதி கீத்தனா, ஸ்ரீ மற்றும் விஷாலி ஆசிரியர் த.குமரன் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மலேசியாவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பாக பங்களித்தனர்.
மலேசியா வாழ் மக்களின் வாழ்க்கை முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள்,அவர்கள் செய்யக் கூடிய பணிகள்,கல்வி முறைகள் ஆகியவற்றை அவர்களுடன் தங்கி அறிந்தும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து இந்தியா – மலேசியா ஒற்றுமையினையும், இளைஞர்களின் முன்னேற்றங்கள் பற்றிய கருத்தரங்கில் கலந்துரையாடினார்கள்.
பின் மலேசியாவின்பாராளுமன்றஉறுப்பினர் திருநங்கை ஷாலினியுடன் எவரும் வெல்லலாம் என்ற தலைப்பில் நாட்டின் முன்னேற்றம் இளைஞர் கையில் என்று விவாதம் நடத்தினார்கள்.மலேசியாவின் பாரம்பரியமான 100 வருடங்களைக் கடந்து செயல்படும் முஸ்லீம் பள்ளிக்குச் சென்று அங்குள்ள மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்கள்.
மறுநாள் சட்டசபை நடைபெறும் பாராக் மாநிலத்திற்குச் சென்று சபாநாயகரை நேரில் சந்தித்து உரையாடினார்கள். பள்ளி மாணவன் நவீன் உரையாடலைக் கேட்டு வியந்த சபாநாயகர், மாணவனை மேலே அழைத்து அவருடைய இருக்ககைக்கு அருகில் நிறுத்தி மகிழ்ந்தார். பின் சுற்றுலாவாக Twin Tower மற்றும் மலேசியாவின் புகழ்பெற்ற முருகன் குகைக் கோயிலுக்குச் சென்று கோவிலின் பெருமை மற்றும் புராணங்களைக் கேட்டு அறிந்தனர்.
இறுதியாக மலேசியாவின் கல்வி அமைச்சர் இளைஞர் பரிமாற்றத்திட்டத்தில் சிறப்பான பங்களிப்பு அளித்த பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிக்கும் பரிசுகளையும், விருதுகளையும், பாராட்டுப் பத்திரங்களையும் அளித்து கௌரவித்தார்கள்.