January 31, 2018
தண்டோரா குழு
பாகிஸ்தான் நாட்டையும் இந்தியாவையும் இணைக்கும் முனாபோ-கோக்ரபார் ரயில் பாதையின் ஒப்பந்தம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்க பாகிஸ்தான் நாட்டின் அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு, பாகிஸ்தான் மற்றும் இந்திய மக்களுக்கு இடையே நல்ல உறவை மேம்படுத்த வேண்டும் என்று இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லையில் உள்ள முனாபோ நகர் ரயில்நிலையத்தில் இருந்து பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகணத்தின் உள்ள கோக்ரபார் ரயில்நிலையம் வரை உள்ள ரயில்பாதையை இணைக்கும் ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளும் கையெழுத்திட்டன.
இந்நிலையில், இந்தியாவை பாகிஸ்தான் நாட்டுடன் இணைக்கும் முனாபோ-கோக்ரபார் ரயில் பாதைஒப்பந்தத்தை,அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் இன்று(ஜனவரி 31) தெரிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் வரும் 2022ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை முன்காவோ(இந்தியா) – கோக்ரபார் (பாகிஸ்தான்) இடையே உள்ள ரயில் பாதையின் ஒப்பந்தம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.