• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியா சாதனை மற்றும் தமிழன் சாதனை புத்ததகத்தில் இடம் பிடித்த நீண்ட திறந்தவெளி பொழுதுபோக்கு மண்டபம்

April 22, 2021 தண்டோரா குழு

கோவை சிறுவாணி அருகே தீத்திபாளையத்தில் உள்ள மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரத்தில்
என்என்ஆர்சி ஓய்வாளர் சமுதாய வளாகம் அமைந்துள்ளது.இதில் கட்டப்பட்ட நீண்ட திறந்தவெளி பொழுதுபோக்கு மண்டபம்
இந்தியா சாதனை மற்றும் தமிழன் சாதனை புத்ததகத்தில் இடம் பிடித்தது.

இது குறித்து ஓய்வு பெற்றவர் சமுதாய திட்டத்தின் தலைவர் தினகர் பெருமாள் கூறுகையில்,

இந்தியா சாதனை மற்றும் தமிழன் சாதனை புத்ததகத்திலும் இந்த நீண்ட திறந்தவெளி பொழுதுபோக்கு மண்டபம் இடம் பிடித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இங்குள்ள அமைதியான சூழலுக்கு அங்கீகரமாக இந்த விருது கிடைத்துள்ளது.நீண்ட பெரிய அளவிலான இந்த ஓய்வுக் கூடத்தில் மேற்கூரை ஓடுகளால் அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து திசைகளிலிருந்தும் இயற்கையான காற்றோட்டம், இயற்கையான சூரிய ஒளி கிடைக்கும் வகையில் இதன் மத்தியில் திறந்த வெளியும் அமைக்கப்பட்டுள்ளது. தியானம், யோகா, இசை, கலை, விளையாட்டு, பிரசாரம் போன்றவைகளை நடத்தவும் வசதிகள் உள்ளன.

இந்தியா சாதனை அகாடமி விருது,நீண்ட ஓய்வு பெற்றோர் கூடத்துக்கான விருதாகும். இந்த ஓய்வுக்கூடம், 242.25 சதுர மீட்டரில்,2,607.59 சதுரடியில் அமைக்கப்பட்டுள்ளது. நிர்மலா நிலையம் ஒய்வு சமுதாயம் இந்த கூடத்தை கோவை மாவட்டத்தில் கடந்தமார்ச் 20, 2021 முதல் செயல்படுத்தி வருகிறது.எல்லா இடங்களிலும் காற்றோட்டமும், சூரிய ஒளியும் கிடைக்கும் வகையில் அமைத்துள்ளோம்.திறந்த வெளி வெளிச்சம் பழங்காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறை.அதை இங்கு அமல்படுத்தியுள்ளோம். முதல் திட்டமாக 3 ஏக்கர் பரப்பளவில் 41 வில்லாக்களை இந்த வளாகத்தில் அமைத்துள்ளோம் என்றார்.

மேலும் படிக்க