• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும் – அமித்ஷா

September 14, 2019

ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என அமித்ஷா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தி தினத்தையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தி குறித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், இந்தியா என்பது பல மொழிகள் கொண்ட நாடு என்றாலும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும்.இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும்’
இந்தியாவை அடையாளப்படுத்த ஒரு பொது மொழி தேவை. அதிகம் பேரால் பேசப்படுவதால் இந்தி நாட்டின் பொது மொழியாக இருக்க வேண்டும். ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். இந்தி மொழியை மக்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தி தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தங்களுடைய தாய்மொழியை அதிகமாக பயன்படுத்த வேண்டும். அதேபோல் இந்தியையும் பயன்படுத்த வேண்டும். காந்தி, வல்லபாய் படேல் கண்ட ’ஒரு நாடு ஒரே மொழி’ கனவை மக்கள் நனவாக்க வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

மேலும் படிக்க