இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த 112 பெண்கள் நாளை குடியரசுத்தலைவர் மாளிகையில் கெளரவிக்கப்படவுள்ளனர்.
இந்தியாவில் தாங்கள் பணியாற்றும் துறைகளில், சாதனை புரிந்து, நாட்டிற்கு பெருமை தேடி தந்த சுமார் 112 இந்திய பெண்களை இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது. “முதல் மகளிர்” என்ற தலைப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட அந்த பெண்களுக்கு நாளை(ஜன 20) மாலை இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் நடைப்பெறும் பாராட்டு விழாவில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கெளரவிக்கவுள்ளார்.
இந்த பட்டியலில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய பசேன்தரி பால் மற்றும் பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும்,இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானிகள் ஆன விமான அதிகாரி பவானா காந்த்,அவானி சதுர்வேதி மற்றும் மோகன சிங் ஆகியோரும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். புதுதில்லியின் முதல் பெண் பஸ் ஓட்டுனர் வெங்கடாரத் சரிதா, இந்தியாவின் முதல் பெண் ஆட்டோ டிரைவர் ஷீலா தவாரே ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.இந்தியாவின் குளோபல் பிராண்ட் தூதர் பதவிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியரான சுசிதா பாலும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது