• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவுக்கான கோயம்புத்தூரின் கண்டுபிடிப்பு – சூப்பர் பேன்

November 13, 2020 தண்டோரா குழு

சந்தையில் கிடைக்கும் பொதுவான சீலிங் ஃபேன்கள் Single phase induction motor-களைப் பயன்படுத்துகின்றன, அவை மலிவானவை ஆனால் மிகவும் திறனற்றவை. 2000 களின் பிற்பகுதியில், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 200 MU க்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் சுமார் 40 கோடி சீலிங் ஃபேன்கள் இருந்தன.

இது மின்சாரப் பற்றாக்குறையால் அந்த நேரத்தில் நம் நாட்டில் பெரும் அழுத்தத்தை உருவாக்கியது. சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க காரணமாக இருந்தது. இந்தியாவில் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் 1 கிலோ CO2 வெளியேற்றப்படுவதோடு, ஒவ்வொரு நாளும் சுமார் 2 லட்சம் டன் CO2 வெளியேற்றப்படுவதில் சீலிங் ஃபேன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொழிற்துறை விஸ்தாரமாக இருந்தபோதிலும், இம்மாதிரியான விரயங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதங்களை நிவர்த்தி செய்வதில் எந்த புதுமையான கண்டுபிடிப்புகளும் செய்யப்படவில்லை.

உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்து வருவதால், மற்றவர்கள் நம் பிரச்சினைகளைத் தீர்த்து, நமது தேவைகளைப் பூர்த்திசெய்யக் காத்திருந்தால் அது சரியாக இருக்காது. எனவே முன்னேறும் இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சீலிங் ஃபேன் தொழில்நுட்பத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நேரம் கனிந்து வந்தது.

இது தொழில்துறை மோட்டார் டிரைவ்களுக்கு, நம்பகமான மற்றும் புதுமையான தீர்வுகளை வழங்குவதில் பிரசித்தி பெற்ற, 30 வருட அனுபவமுள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனமான வெர்சா டிரைவ்ஸ் பிரைவேட் லிமிடெட் (கோயம்புத்தூர்) -இன் பார்வைக்கு வந்தது. ஆற்றல் சேமிப்பு (efficiency) மற்றும் சுற்றுச்சூழலின் அடிப்படையில் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய நன்மைகளை யோசித்து இந்நிறுவனத்தார் உடனடி நடவடிக்கையில் இறங்கினார்கள், இதன் விளைவாக, 2012 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் super energy efficient சீலிங் ஃபேன் -ஆக சூப்பர்ஃபேன் உருவாகியது.

சீலிங் ஃபேன்களின் நிலைத்தன்மையும், செயல்பாடும் பரஸ்பரம் பிரத்யேகமாக இல்லை என்று சூப்பர்ஃபேன் நம்பியது. எனவே, சீலிங் ஃபேன்களின் செயல்திறனையும் தாண்டி மின்னழுத்த ஏற்றத் தாழ்வு, குறைந்த மின்னழுத்தங்களில் செயலற்ற தன்மை (efficiency), கப்பாசிட்டர் செயலிழப்பு, மோட்டார் வைண்டிங் எரிந்து போவது, அதிகமாகச் சூடாவது மற்றும் ரிமோட் கண்ட்ரோல் (Remote) செயல்பாட்டின் பற்றாக்குறை, வேகத்தில் சீரற்ற தன்மை போன்ற பல சிக்கல்களைத் தீர்க்க சூப்பர்ஃபேன் உருவாக்கப்பட்டது.

முதல் சூப்பர்ஃபேன் மாடல் 35W ஐ மட்டுமே பயன்படுத்துகிறது, அதே நேரத்தில் சிறந்த அல்லது அதிக காற்றை அளித்தது. 75W ஐ பயன்படுத்தி இயங்கும் சாதாரண ஃபேன்களைக் காட்டிலும் அதிகரித்த செயல்பாட்டையும் வழங்குகிறது. ஒரு ஃபேனை இயக்கக்கூடிய Brushless Direct Current (BLDC) மோட்டாரின் தனது சொந்தப் பதிப்பு ஒன்றை சூப்பர்ஃபேன் உருவாக்கியது. BLDC சீலிங் பேனின் இந்த புதுமையான அணுகுமுறை, வடிவமைப்பு காப்புரிமை (patent) மற்றும் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயல்திறனின் முன்னேற்றம், இந்தியாவில் உள்ள அனைத்து ஃபேன்களையும் சூப்பர்ஃபேன் போன்ற சூப்பர் ஆற்றல் திறன் கொண்ட ஃபேன்களாக மாற்றினால், மின்சார நுகர்வு ஒவ்வொரு நாளும் 100MU ஆகக் குறையும், மேலும் நமது நாட்டுக்கு ஒவ்வொரு நாளும் 1 லட்சம் டன் CO2 உமிழ்வு தவிர்க்கப்படும்.

சூப்பர்ஃபேனின் இந்த வெற்றி மற்ற பிரபலமான சீலிங் ஃபேன் தயாரிப்பாளர்களையும் இந்த தொழில்நுட்பத்தைத் தழுவி, சூப்பர் ஆற்றல் திறன் வாய்ந்த சீலிங் ஃபேன்களின் சொந்த பதிப்பைக் கொண்டுவரத் தூண்டியது. சூப்பர்ஃபேனின் கண்டுபிடிப்பு காரணமாக, சூப்பர் ஆற்றல் திறன் கொண்ட சீலிங்ஃபேன்களால் கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியா 1200 MU க்கும் மேல் மின்சாரத்தை சேமித்துள்ளது என்று தோராயமாக மதிப்பிடலாம். ஒரு கோயம்புத்தூர் தயாரிப்பு ஒன்று ஆற்றல் திறன் மற்றும் ஃபேன் தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஒரு கோவை வாசியாக பெருமைப்படுவோம்.

மேலும் படிக்க