April 20, 2020
தண்டோரா குழு
இந்தியாவில் 80 சதவிகிதம் பேருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா தொற்று பரவுகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில்,இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 80% பேருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை என
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியான நிலையில் விளக்கமளித்துள்ளது.
அறிகுறிகள் இல்லாமல் தொற்று பரவுவதால் அதை கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. தற்போது தொற்று உறுதியான நபர்களின் தொடர்பில் இருந்து நபர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.