• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவில் 50 ஆயிரம் கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் சேவை இல்லை !

April 13, 2017 தண்டோரா குழு

இந்தியாவின் 50,000 கிராமங்களுக்கு இன்னும் மொபைல் சேவை வழங்கப்படாமல் உள்ளது என மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று மத்திய தொலைதொடர்ப்புத் துறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தமத்திய தொலைதொடர்ப்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா,
இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் மொபைல் சேவை சென்றடைந்துவிட்டது என நாங்கள் ஒருபோதும் கூறியதில்லை. இன்னும் 50,000 கிராமங்களுக்கு மொபைல் நெட்வொர்க் சேவை வழங்கப்படாமல் உள்ளது என்று கூறினார். குறிப்பாக நக்சல்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான்&நிக்கோபார் தீவுகள், லக்‌ஷத்வீப் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளின் பெரும்பாலான கிராமங்களில் இன்னும் மொபைல் நெட்வொர்க் சேவை வழங்கப்படாமல் உள்ளது”என்றார். மேலும், அனைத்து மாநிலங்களில் உள்ள தொலைத்தொடர்பு அதிகாரிகளுக்கும் இதுதொடர்பான கணக்கெடுப்பை நடத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அதைபோல், இந்தியாவின் தொலைநோக்கு திட்டமான ’பாரத்நெட்’ மூலமாக 2 லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களுக்கு 100 MBPS வேகத்தில்தொலைதொடர்பு சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக 1 லட்சம் கிராமங்களுக்கு தொலைதொடர்பு சேவை வழங்கும் பணி நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் ‘மனோஜ் சின்ஹா’ தெரிவித்தார்.

மேலும் படிக்க