• Download mobile app
14 Dec 2025, SundayEdition - 3595
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் 2030 வரை 35 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்ய அமேசான் நிறுவனம் திட்டம்

December 14, 2025 தண்டோரா குழு

முதல் இந்தியாவில் ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி உள்ளிட்ட அமேசான் நிறுவனம் செய்துள்ள 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒட்டுமொத்த முதலீடுகள், இந்தியாவின் ஆத்மநிர்பர் தொலைநோக்குப் பார்வைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன என்று ஆறாவது அமேசான் சம்பவ் உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட கீஸ்டோன் ஸ்ட்ராடஜியின் ஒரு பொருளாதார தாக்க அறிக்கை தெரிவிக்கிறது.

கீஸ்டோன் அறிக்கையின்படி,இந்த முதலீடுகள் அமேசான் நிறுவனத்தை இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராகவும், இ-வணிக ஏற்றுமதிகளின் மிகப்பெரிய செயல்பாட்டாளராகவும், மேலும் இந்தியாவின் முன்னணி வேலைவாய்ப்பு வழங்குநர்களில் ஒன்றாகவும் நிறுவியுள்ளது. இந்த நிறுவனம், நிறைவேற்று மையங்கள், போக்குவரத்து நெட்வொர்க்குகள், தரவு மையங்கள், டிஜிட்டல் செலுத்துதல்கள் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட புறநிலை மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளை கட்டியெழுப்புவதில் பெரும் அளவில் முதலீடு செய்துள்ளது.

கீஸ்டோன் அறிக்கையின்படி, அமேசான் 12 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது மற்றும் மொத்த இ- வணிக ஏற்றுமதிகளில் $20 பில்லியனுக்கும் அதிகமாக சாத்தியமாக்கியுள்ளது, அத்தோடு, மேலும் 2024 ஆம் ஆண்டில் தொழில்துறைகள் முழுவதிலும் நேரடி, மறைமுக, தூண்டப்பட்ட மற்றும் பருவகால வேலைவாய்ப்புகளில் கிட்டத்தட்ட 2.8 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு ஆதரவு அளித்துள்ளது.வணிக விரிவாக்கம் அத்துடன் மூன்று மூலோபாய அடித்தளங்களான ஏஐ-சார்ந்த டிஜிட்டல் மயமாக்கல், ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்ற அதே மன்றத்தில், அமேசான் இந்தியாவிற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன், 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து வணிகங்களிலும் $35 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.

அமேசான் நிறுவனத்தின் எமர்ஜிங் மார்க்கெட்ஸ் பிரிவின் மூத்த துணைத் தலைவர் அமித் அகர்வால் கூறுகையில்,

“கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பணிவுடன் இருக்கிறோம். இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் வளர்ச்சி, ‘ஆத்மநிர்பார் மற்றும் விக்ஸித் பாரத்’ தொலைநோக்குடன் சரியாகப் பொருந்துகிறது. மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்ற மற்றும் ‘மேட் இன் இந்தியா’ பொருட்களை உலகளவில் கொண்டு சொல்கின்ற வகையில் இந்தியாவில் உள்ள சிறு வணிகங்களுக்கான புறநிலை மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் நாங்கள் பெரும் முதலீடு செய்துள்ளோம்.

2030 ஆம் ஆண்டை எதிர்நோக்கி, மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கான ஏஐ தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதன் மூலம் மற்றும் மொத்தமாக 80 பில்லியன் டாலர்கள் வரை இ-காமர்ஸ் ஏற்றுமதியை நான்கு மடங்காக உயர்த்துவதன் மூலம், இந்தியாவின் வளர்ச்சிக்கான ஒரு வினையூக்கியாக தொடர்ந்து இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 2030 ஆம் ஆண்டில், அமேசான் 3.8 மில்லியன் நேரடி, மறைமுக, தூண்டப்பட்ட மற்றும் பருவகால வேலைவாய்ப்புகளை ஆதரிக்கும்.”என்று கூறினார்.

மேலும் படிக்க