• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் 2 பேருக்கு ஓமைக்ரான் வகை தொற்று உறுதி!

December 2, 2021 தண்டோரா குழு

கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்று பரவியிருந்த தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்துக்கு தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவும் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி இருந்தது. இதற்கிடையில், நேற்று வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதில் யாரேனும் ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற சோதனை நடைபெற்றது.

அதில், தற்போது கர்நாடகாவைச் சேர்ந்த 66 மற்றும் 46 வயதான 2 ஆண்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் விமானத்தில் உடன் பயணித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்தி கொள்ளுவது உள்ளிட்ட அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா கொரோனா வைரசை விட ஒமிகிரான் கொரோனா வைரஸ் 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க