January 22, 2026
தண்டோரா குழு
ஸ்கோடா ஆட்டோ இந்தியா புதிய குஷாக் -ஐ அறிமுகப்படுத்தி, மதிப்பு, பாதுகாப்பு, இயக்கத் தன்மை ஆகியவற்றை புதிய வரையறையில் கொண்டு வந்து, ஐரோப்பிய தொழில்நுட்பத்தை அனைவருக்கும் எளிதாக அணுகக்கூடியதாக மாற்றும் தனது திட்டத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
குஷாக் , இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் பிராண்டின் முதல் வாகனமாகும் மற்றும் இந்தியாவில் நிறுவனத்தின் வளர்ச்சியை வேகமாக முன்னெடுத்துள்ளது.புதிய எட்டு-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், ரியர் சீட் மசாஜ் செயல்பாடு மற்றும் பல புதிய அம்சங்கள் மற்றும் ஸ்டாண்டர்ட் உபகரணங்கள் போன்ற பிரிவில் முதல்முறை தொழில்நுட்பங்களுடன், புதிய குஷாக் இந்திய சாலைகளில் ஐரோப்பிய பொறியியலை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் ஸ்கோடா ஆட்டோ இந்தியா -வின் திட்டத்தை பின்பற்றுகிறது.
ஸ்கோடா ஆட்டோ இன் சிஇஓ கிளவுஸ் ஜில்மர் கூறியதாவது
“புதுப்பிக்கப்பட்ட குஷாக், சர்வதேச சந்தைகளில் ஸ்கோடா ஆட்டோ வளர்ச்சியை முன்னெடுக்க இந்தியா எவ்வளவு முக்கியமான தளமாக உள்ளது என்பதை மேலும் வலியுறுத்துகிறது. குஷாக், இந்திய வாடிக்கையாளர்களிடையே மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதி மாடலாகவும் மிகக் குறுகிய காலத்திலேயே உறுதியான இடத்தைப் பெற்றுள்ளது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்டு டைரக்டர் ஆஷிஷ் குப்தா கூறியதாவது,
“ஸ்கோடா-வில், எங்கள் குறிக்கோள் ஐரோப்பிய தொழில்நுட்பத்தை அனைவருக்கும் எளிதாக அணுகக்கூடியதாக மாற்றி, இந்தியாவின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்க வைப்பதாகும். புதிய குஷாக் -ஐ அறிமுகப்படுத்தி, எங்கள் வரிசையில் முன்னணி ‘உண்மையான ஆட்டோமேட்டிக்’ எஸ்யூவி களை வழங்கும் பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்துகிறோம். இது பாதுகாப்பு, வசதி, வடிவமைப்பு மற்றும் சுலபமான அம்சங்களை ஸ்டாண்டர்டாக வழங்குகிறது மற்றும் நமது பரிசோதிக்கப்பட்ட ஐரோப்பிய பொறியியலால் உருவாக்கப்பட்டுள்ளது.
நாம் எப்போதும் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை கேட்கிறோம், புதிய குஷாக் -ஐ அறிமுகப்படுத்துவது, வளர்ந்து வரும் ஸ்கோடா குடும்பத்திற்காக எங்கள் வரிசையை நவீனமாகவும் பொருத்தமானதாகவும் வைத்திருப்பதில் அடுத்த படியாகும்.” ஸ்கோடா ஆட்டோ இந்தியா – வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய குஷாக் -க்கான முன்பதிவு ரூபாய்.15,000 தொகையில் திறக்கப்பட்டுள்ளது 2026 மார்ச் மாத இறுதியில் இருந்து டெலிவரி தொடங்கும்.புதிய குஷாக் அதன் சிறந்த ஓட்டத் தன்மைகளையும் 188 mm கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றுடன் , சாலையிலும் தடைகளை கடந்து செல்லும் திறனையும் உயர் வேகத்தில் நிலைத்திருக்கும் சக்தியையும் வழங்குகிறது.
இது பிரிவில் முதல்முறையாக புதிய எட்டு-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த டிரான்ஸ்மிஷன், திறமையான, சக்திவாய்ந்த மற்றும் பரிசோதிக்கப்பட்ட 1.0 டிஎஸ்ஐ எஞ்சினுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 85கேடபிள்யூ சக்தியையும் 178 என்எம் டார்க் அளவையும் வழங்குகிறது. இந்த எஞ்சின் ஆறு-ஸ்பீடு மானுவல் டிரான்ஸ்மிஷனுடன் கூட கிடைக்கிறது. செயல்திறனை விரும்பும்வர்கள் 110 என்எம் சக்தியும் 250ன்எம் டார்க் அளவையும் வழங்கும் 1.5 டிஎஸ்ஐ எஞ்சினை தேர்வு செய்யலாம். இந்த நான்கு சிலிண்டர் டர்போ எஞ்சின் ஆக்டிவ் சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் கூடியது மற்றும் அதனை மட்டும் வேகமாக மாற்றும் ஏழு-ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய Kushaq-இல், 1.5 டிஎஸ்ஐ இல் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் உள்ளது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா, புதிய எட்டு-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் மற்றும் பரிசோதிக்கப்பட்ட ஏழு-ஸ்பீடு டிஎஸ்ஜி அறிமுகப்படுத்துவதன் மூலம் உண்மையான ஆட்டோமேட்டிக் கார்கள் வழங்கும் தனது திட்டத்தை தொடர்கிறது.