• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழகத்திற்கு எந்த இடம் தெரியுமா?

July 23, 2018 தண்டோரா குழு

பொது விவகார மையம் எனப்படும் பப்ளிக் அஃபயர்ஸ் செண்டர் இந்தியா இந்தியாவில் சிறந்த ஆட்சியைய் தரும் மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை தரும் மாநிலங்களின் பட்டியலை, சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் ஆண்டுதோறும் இவ்வமைப்பு வெளியிட்டு வருகிறது.2 கோடி மக்களுக்கு அதிகமாக உள்ள மாநிலங்கள், 2 கோடி மக்களுக்கு குறைவாக உள்ள மாநிலங்கள் என இரண்டு பிரிவாக வரிசைப்படுத்தப்பட்டு அறிக்கை வெளியிடுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களிலும் நேரடியாக ஆராய்ச்சி செய்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட விஷயங்களை ஆராய்ச்சி செய்துள்ளனர். அரசு மக்களுடன் எப்படி தொடர்பில் இருக்கிறது. அரசின் திட்டங்கள் மக்களிடம் எப்படி சென்று சேர்கிறது. மக்களை அரசு எப்படி நடத்துகிறது என்பதை இதில் கருத்தில் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான ஆய்வு அறிக்கையில், சிறந்த நிர்வாகத்தை தரும் பெரிய மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் கேரளாவும், 3வது இடத்தில் தெலங்கானாவும் 4வது இடத்தில் கர்நாடக மாநிலமும் 5வது இடத்தில் குஜராத்தும் உள்ளன.
இதுபோல, நல்லாட்சி தரும் சிறிய மாநிலங்களில் முதலிடத்தை இமாச்சல் பிரதேசம் பிடித்துள்ளது. கோவா, மிசோராம், சிக்கிம், திரிபுரா ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன.

இந்த பட்டியலில் உத்தர பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், டெல்லி , ஹரியானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மிகவும் பின்தங்கி இருக்கிறது. மேலும் ஜம்மு காஷ்மீரும் இந்த பட்டியலில் மிகவும் பின்தங்கி இருக்கிறது.நல்ல ஆட்சி தரும் பட்டியலில் முதல் நான்கு இடத்தில் தென்னிந்தியாவை சேர்ந்த மாநிலங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க