• Download mobile app
25 Feb 2026, WednesdayEdition - 3668
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் திட்டங்களுக்கான கட்டமைப்பை வலுப்படுத்த செயற்கை நுண்ணறிவு வணிக வாய்ப்பு தளம்: ‘ப்ராஜெக்ட்ஸ் டுடே’ அறிமுகம்

February 25, 2026 தண்டோரா குழு

இந்தியாவின் திட்ட கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில்,’ப்ராஜெக்ட்ஸ் டுடே’ நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் புதிய வணிக வாய்ப்பு இணைய தளத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய இணைய தளம், ப்ராஜெக்ட்கள் எந்த நிலையில் உள்ளன, டெண்டர் விவரங்கள், ஆர்டர் அப்டேட்கள் மற்றும் பங்குதாரர்களின் தகவல்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் மிக எளிதாக வழங்குகிறது. இதன் மூலம் நிறுவனங்கள் சரியான நேரத்தில் சரியான ப்ராஜெக்ட்களில் அதாவது திட்டங்களில் ஈடுபட முடியும்.

இந்த மேம்படுத்தப்பட்ட தளத்தில் பிஓக்யூ தேடல், துணை-ப்ராஜெக்ட்களைக் கண்காணித்தல், டெண்டர் முதல் ஆர்டர் வரையிலான முழு விவரங்கள், ஏலம் கேட்பவர்கள் பற்றிய தகவல்கள், வாய்ப்புகளைக் கணக்கிடும் கருவிகள் மற்றும் நிறுவனங்களின் நம்பகத்தன்மை பற்றிய தரவுகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படுகின்றன.

இந்த வசதிகள் மூலம், பயனர்கள் தங்களுக்குத் தேவையான வாய்ப்புகளை மிக விரைவாகக் கண்டறிய முடியும். நிறுவனங்கள் “என்ன நடக்கிறது” என்பதை மட்டும் தெரிந்து கொள்ளாமல், “அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்” என்ற தெளிவான முடிவை எடுக்கவும் இது பெரிதும் உதவுகிறது.25 ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சி அனுபவத்தைக் கொண்டுள்ள ‘ப்ராஜெக்ட்ஸ் டுடே’, தற்போது தீவிர பரிசீலனை, திட்டமிடல், டெண்டர் மற்றும் செயல்படுத்தப்படும் நிலையில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்டிவ் ப்ராஜெக்ட்களைக் கண்காணித்து வருகிறது.

ஒவ்வொரு மாதமும் 1,500 புதிய ப்ராஜெக்ட்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெண்டர்கள் மற்றும் 1,200 ஆர்டர் அப்டேட்கள் இதில் சேர்க்கப்படுகின்றன. இது அனைத்து மாநிலங்கள் மற்றும் துறைகளிலும் தொழில்துறையினருக்குச் சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது.இதன் நோக்கம் வெறும் தகவல்களை வழங்குவது மட்டுமல்ல. தேசத்தைக் கட்டமைப்பவர்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருக்கும் புரொமோட்டர்கள், ஒப்பந்ததாரர்கள், ஆலோசகர்கள், விநியோகஸ்தர்கள், சேவை வழங்குநர்கள், மற்றும் நிதியளிப்பவர்கள் இடையே வணிக வாய்ப்புகள் தடையின்றி சென்றடைய வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

புதிய தொழில்நுட்பங்களுடன் தொடர்ந்து வளரும் அதே வேளையில், ‘வாடிக்கையாளருக்கு முதலிடம், நாட்டிற்கு எப்போதும் முன்னுரிமை’ என்ற கொள்கையில் ‘ப்ராஜெக்ட்ஸ் டுடே’ உறுதியாக உள்ளது.இந்த புதிய அறிமுகம், இந்தியாவின் திட்டங்கள் செயல்பாட்டுத் துறையை வலுப்படுத்துவதற்கான ‘ப்ராஜெக்ட்ஸ் டுடே’வின் தொலைநோக்குப் பார்வையில் ஒரு மிக முக்கியப் படியாகும்.

இதன் மூலம் சரியான நேரத்தில் ஒருங்கிணைப்புகள் நடந்து, திட்டங்கள் மிக விரைவாகச் செயல்படுத்தப்படும். வெறும் திட்டங்களாக இருப்பவை, சிறந்த கூட்டாண்மைகளாகவும் வெற்றிகரமான செயல்களாகவும் மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மேலும் படிக்க