• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை-அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை

March 21, 2017 தண்டோரா குழு

இந்தியாவில் உள்ள கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் சுமார் 6 கோடி மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை என்று பன்னாட்டு சர்வதேச ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.

இது குறித்து சர்வதேச ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

“இந்தியாவில் கிராமப்புற மற்றும் ஊரக பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு பெரும்பாலும் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. சுமார் 6 கோடி மக்கள் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இதற்கான காரணம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்கையில் மக்கள் தொகை பெருக்கம், வறட்சி, அரசு திட்டங்கள் முறையாக செயல்படுத்துவதில்லை, சுத்திகரிப்பு செய்யப்படும் தண்ணீரை வீணாக்குதல், விவசாயம் மற்றும் வீட்டுக்கு உபயோகம் படுத்தும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்யாமல் வீணாக்குதல் போன்றவை காரணங்களாக கருதப்படுகின்றன.

தண்ணீர் சுத்தமாக இல்லாத காரணத்தினால் கொசுக்கள் உற்பத்தியாகி காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்கள் பரவுகின்றன.”இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தண்ணீர் ஆராய்சியாளர் ஒருவர் கூறுகையில்

”மழை தண்ணீரை சேமிக்காமல் நாம் வீணாக்குகிறோம்.நிலத்தடி தண்ணீரை சேமிக்க தகுந்த வழிமுறையை கையாள வேண்டும்.குளம்,எரி,குட்டைகளை தூர் வாரி தண்ணீரை சேமிக்க வேண்டும்.” என்றார்.

மேலும் படிக்க