March 19, 2020
தண்டோரா குழு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,148-ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,23,065-ஆக உயர்ந்துள்ளது. மேலும் சீனா-3,245, இத்தாலி- 2,978, ஈரான்-1,284 ஸ்பெயினில் 640 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
கொரோனா வைரசுக்கு இந்தியாவில், இதுவரை 166 பேர் பாதிக்கப்பட்டள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில், 144பேர் இந்தியர்கள். 25 பேர் வெளிநாட்டினர்கள். டெல்லி, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் என மூன்று பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.