March 29, 2020
தண்டோரா குழு
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.இந்தியாவில் இதுவரை 1024 பேர் பாதிக்கப்பட்டும், 27 பேர் உயிரிழந்தும், 95 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 106 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 6 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதுவரை சுமார் 35 ஆயிரம் பேரின் ரத்தமாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் தெரிவித்துள்ளது.