• Download mobile app
24 Jan 2026, SaturdayEdition - 3636
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வியை வடிவமைப்பதில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த யூரோகிட்ஸ்

January 24, 2026 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி மழலையர் பள்ளியான யூரோகிட்ஸ், நாட்டில் குழந்தைக் கல்வியை மேம்படுத்துவதில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

ஒரு முன்னோடி முயற்சியாக துவங்கி இப்பள்ளி, இன்று நாடு தழுவிய ஒரு பெரிய இயக்கமாக மாறியுள்ளது. குழந்தைகளின் வாழ்க்கையில் ஆரம்ப வருடங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் சமூகமும் புரிந்துகொள்ள இது உதவியுள்ளது.

25 ஆண்டு கால மைல்கல் சாதனை குறித்து யூரோகிட்ஸ் ப்ரீ-கே பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.எஸ். சேஷசாய் கூறுகையில்,

கடந்த 25 ஆண்டுகளில், யூரோகிட்ஸ் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு கல்வியில் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. அத்துடன் ‘ஒவ்வொரு குழந்தைக்கும் சரியான தொடக்கம் அவசியம்’ என்பதை உறுதி செய்துள்ளது.இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக சரியான தொடக்கம் என்னும் ‘சஹி சுருவாத்’ என்னும் விழிப்புணர்வுத் திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. குழந்தைகளின் ஆரம்ப கால வளர்ச்சி ஏன் முக்கியமானது என்பதையும், சரியான கற்றல் சூழல் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை எப்படி வடிவமைக்கிறது என்பதையும் பெற்றோர்களுக்குப் புரிய வைப்பதே இதன் நோக்கமாகும்.

பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் வகுப்பறை அனுபவங்களின் அடிப்படையில், குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற, விளையாட்டு வழியிலான மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்வி முறையை இத்திட்டம் வலியுறுத்துகிறது.”‘சஹி சுருவாத்’ திட்டத்தின் மூலம், குழந்தைகளின் ஆரம்ப காலத்தில் உண்மையில் எது முக்கியம் என்பதைப் பற்றிய விவாதங்களை யூரோகிட்ஸ் மக்களிடைய கொண்டு செல்ல இருக்கிறது.

மேலும் குழந்தைகள் எப்படி சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள், மற்றவர்களுடன் பழகுகிறார்கள், உடல் அளவில் வளர்கிறார்கள், சுதந்திரமாகச் செயல்படுகிறார்கள் மற்றும் பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்த உள்ளது. ஆசிரியர்களின் கனிவான கவனிப்பு, பாதுகாப்பான சூழல், வயதுக்கு ஏற்ற நடைமுறைகள் மற்றும் விளையாட்டு வழிக் கல்வி ஆகியவை குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் ஆர்வத்தை வளர்க்கும் என்பதை இத்திட்டம் வலியுறுத்த உள்ளது.மழலையர் பள்ளி கல்வி என்பது மிக அவசியமான ஒன்றாகும், அதைத் தவிர்க்கக்கூடாது.

குழந்தையின் வாழ்க்கைக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதில் இதுவே முதல் மற்றும் மிக முக்கியமான நிலையாகும். பல்வேறு வழிகளில் சஹி சுருவாத்’ இயக்கத்தை மக்களிடம் கொண்டு செல்லவும், தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் யூரோகிட்ஸ் திட்டமிட்டு உள்ளது. பெற்றோர்களுக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட கையேடுகள் மற்றும் விழிப்புணர்வு பொருட்கள் வழங்குதல், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசுதல், யூரோகிட்ஸ் இணையதளத்தில் சிறப்புத் தகவல்களை அளித்தல், ஊடகங்கள் மூலம் செய்திகளைப் பரப்புதல் மற்றும் பள்ளிகளிலும் சமூக அமைப்புகளிலும் நேரடியாகக் கலந்துரையாடுதல் போன்றவை மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த முயற்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, ஆரம்பக் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி குடும்பங்களுக்குக் கற்பிப்பதையும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

மேலும் படிக்க