November 30, 2021
தண்டோரா குழு
இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா, இதுவரை 14 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள ஓமீக்ரான் வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை எவருக்கும் கண்டறியப்படவில்லை.
இந்தியாவில் ஓமீக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.ஒமிக்ரான் வைரஸை எதிர்த்துப் போராட அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளோம்எனக் கூறியுள்ளார்.