• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லாதோர் எண்ணிக்கை உயர்வு

January 31, 2019

இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2017-2018ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் விகிதம் அதிகரித்துள்ளதாக, தேசிய மாதிரி புள்ளியியல் ஆய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட மத்திய அரசு தாமதப்படுத்துவதாக கூறி, தேசிய புள்ளிவிவர ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து, பி.சி.மோகனன், ஜே.வி.மீனாட்சி ஆகியோர் பதவி விலகிய நிலையில், Business Standard செய்தி நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2017-2018-ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வேலைவாய்ப்பின்மை 6.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1972-ஆம் ஆண்டு மட்டுமே இதே போல 5 சதவிகிதத்திற்கும் அதிகமாக நாட்டில் வேலைவாய்ப்பின்மை நிலவியது.

தற்போது வெளியாகியுள்ள அறிக்கையின்படி, 2017-18-ஆம் நிதியாண்டில் நகரங்களில் வேலையில்லாத ஆண்களின் விகிதம் 18.7 சதவிகிதமாகவும், பெண்களின் விகிதம் 27.2 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் வேலையில்லாத ஆண்களின் விகிதம் 17.4 சதவிகிதமாகவும், பெண்களின் விகிதம் 13.6 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்கு பின் மேற்கொள்ளப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ ஆய்வில், வேலைவாய்ப்பின்மை உயர்ந்தது குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் எனப்படும் அமைப்பு, கடந்த ஆண்டில் ஒரு கோடியே பத்து இலட்சம் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க