• Download mobile app
13 May 2025, TuesdayEdition - 3380
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவிலேயே முதன்முறையாக வாட்ஸப் எண் மூலம் ஆட்டோ புக் செய்யும் வசதி

December 24, 2022 தண்டோரா குழு

கோவையில் சமீபத்தில் அறிமுகமான ஊர் கேப்ஸ் நிறுவனம் தங்களோடு இணைந்து பணிபுரியும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூபாய் பத்துலட்சம் மதிப்பிலான உயிர்காப்பீட்டு சான்றிதழை இலவசமாக வழங்கியது.கடந்த ஆகஸ்ட் மாதம் கோவையில் துவங்கப்பட்ட ஊர் கேப்ஸ் நிறுவனம் ஆட்டோ ஒட்டுநர்களுக்கு உயிர் காப்பீடு, உணவகம் , ரேஷன் கடை ,ஈட்டிய விடுப்பு போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்தது.

அதன் ஒருபகுதியாக தற்போது , பணிக்கு தவறாமல் வரும் இருபது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூபாய் பத்துலட்சம் மதிப்பிலான உயிர் காப்பீடு செய்து அதற்கான சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்கியது. இதனை ஊர் கேப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜோசப் சுரேஷ் சான்றிதழ்களை வழங்கி ஓட்டுநர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.ஊர் கேப்ஸ் நிறுவனம் முன்னர் அறிவித்தது போல ஓட்டுநர்களுக்கான நலத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் இதனால் ஓட்டுனர்களின் சமூக மற்றும் பொருளாதாரத்தில் நல்ல மாற்றங்கள் உருவாகும் என்றும் ஜோசப் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஊர் கேப்ஸ் நிறுவனம் இந்தியாவிலேயே முதன்முறையாக வாட்ஸப் ( 80984 80980 ) என்ற எண் மூலம் ஆட்டோ புக் செய்யும் வசதியை கோவையில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் படிக்க