• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்” – ஆளுநர் ஆர்.என்.ரவி

January 5, 2022 தண்டோரா குழு

இந்த ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கினார்.

கொரோனா 2 வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகள். முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணி அதிகரித்துள்ளது.

எங்கும் தமிழ் ;எதிலும் தமிழ் திட்டம்’ மூலம் தமிழை எல்லா இடங்களிலும் கொண்டு சேர்க்க நடவடிக்கை.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இந்த அரசு உறுதியாக உள்ளது.பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படும்.

முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தேக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும்.காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது.‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ மூலம் தரமான கல்வியை எல்லா குழந்தைகளுக்கும் தர தமிழக அரசு முனைந்திருக்கிறது.

தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையையே தமிழ்நாடு அரசு பின்பற்றும்.
ஒமிக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில்தான்.இலங்கை தமிழர் நலனுக்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள்செயல்படுத்தப்படுகின்றன.
இலங்கை சிறையில் உள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உயர்கல்வியில் தரமான பாடத்திட்டத்தை சேர்த்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
விவசாயிகளின் வளர்ச்சிக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது; வரலாறு காணாத அளவுக்கு இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

“ஜனவரி 12ம் தேதி உலகத்தமிழ் நாளாக கொண்டாடப்படும்”.உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அதிகாரங்களை வழங்கி ஜனநாயகத்தை காப்பதில் தமிழக அரசு உறுதிபட உள்ளது.
மிக விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவப்புரம், நூலகங்கள் மேம்படுத்தப்படும்.500 கோடி ரூபாயில் சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்படும். 10 வருடத்தில் தமிழ்நாடு குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில அரசின் பாடலாக அறிவித்து அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்களில் பாடப்படுகிறது; தனியார் நிகழ்ச்சிகளிலும் பாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
உயர்க்கல்வி பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும்.மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும்.

வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித்திரு நாடு பாரதியார் பொன்மொழியுடன் சட்டப்பேரவையில் உரையை நிறைவு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி.

மேலும் படிக்க