• Download mobile app
30 Aug 2025, SaturdayEdition - 3489
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் முப்படை வீரர்கள் சல்யூட் அடிப்பதற்கு அர்த்தம் தெரியுமா?

April 18, 2016 தண்டோரா குழு

இந்தியாவில் முப்படைகளான ராணுவப்படை, கப்பல் படை, விமானப் படையை சேர்ந்தவர்கள் அரசு விழாக்களில் உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்வதை நாம் எல்லோரும் பார்த்திருப்போம்.

குடியரசு மற்றும் சுதந்திர தினங்களில் இந்தியாவின் நுழைவு வாயிலில் அமர் ஜவான் ஜோதி என்ற இடத்தில் முப்படையை சேர்ந்த வீரர்களும் மரியாதை செய்வார்கள்.

பெரும்பாலும் அவர்கள் மரியாதை செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், அவர்கள் சல்யூட் அடிக்கும் போது ஒருவருக்கோவர் சல்யூட் கை வைக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும் அது ஏன் எனத் தெரியுமா?

இராணுவ மரியாதை (சல்யூட்).

ராணுவ வீரர்கள் சல்யூட் அடிக்கும்போது உள்ளங்கையை விரித்து யாருக்கும் சல்யூட் அடிக்கிறார்களோ அவர்களை நோக்கி இருக்கும். அது ஏன் என்றால்? என் கையில் எந்த ஆயுதமும் இல்லை என்னை நம்பலாம் என்று அர்த்தமாம்.

கப்பல் படை (சல்யூட்)

பழங்காலத்தில் மாலுமிகள் எப்பொழுதும் கப்பலில் தான் வேலை செய்து கொண்டிருப்பார்கள். இதனால் அவர்கள் கைகள் கிரீஸ் படிந்து அழுக்காக இருக்கும். அந்தச் சமயத்தில் உயரதிகாரிகள் வரும்போது அவர்களுக்கு மரியாதை செய்யும் பொது அழுக்கு கையை காட்டக்கூடாது என்பதற்காக உள்ளங்கையை மறைத்து சல்யூட் அடிப்பார்கள்.

விமானப் படை (சல்யூட்)

விமானப்படை வீரர்கள் சல்யூட் அடிக்கும்போது அவர்களது கை 45 டிகிரி கோணத்தில் வானத்தை நோக்கி இருக்கும். ஏனென்றால் வானத்தை நோக்கி முன்னேறத்தை காட்டுவதாக அர்த்தமாம். ஆரம்பத்தில் இவர்களும் இராணுத்தினரை போலத் தான் சல்யூட் அடித்து வந்தனர் காலப்போக்கில் அதனை மாற்றிவிட்டனர்.

மேலும் படிக்க