• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் முதல் ‘ரீசார்ஜ் உடன் இணைந்த மொபைல் திருட்டு மற்றும் இழப்பு காப்பீட்டுத் திட்டம்’ விஐ அறிமுகம்

December 16, 2025 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான விஐ ,தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக மொபைல் திருட்டு மற்றும் இழப்பு காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இத்துறையில் செய்யப்படும் முதல் முயற்சியாகும்.

வழக்கமான இன்சூரன்ஸ் பாலிசிகள் பெரும்பாலும் மொபைல் சேதமடைவதற்கு மட்டுமே காப்பீடு வழங்குகின்றன. ஆனால், ஸ்மார்ட்போன்கள் தொலைந்து போவது அல்லது திருடப்படுவது வாடிக்கையாளர்களின் பெரிய கவலையாக உள்ளது. இந்தக் குறையைப் போக்கும் வகையில் விஐ இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மே 2025-ல் வெளியிட்ட அறிக்கையின்படி, சுமார் 85.5 சதவீத வீடுகளில் குறைந்தது ஒரு ஸ்மார்ட்போனாவது உள்ளது.

மொபைல் இன்சூரன்ஸ் சந்தை இந்த ஆண்டு 2.6 பில்லியன் டாலர்களை எட்டும் என்றும், இது ஆண்டுக்கு 14 சதவீதம் வளர்ச்சிப் பெறும் என்றும் இத்துறையின் ஆய்வறிக்கையொன்றில் கணிக்கப்பட்டுள்ளது.அதேநேரம்,ஒரு நடுத்தர ரக போனை மாற்ற வேண்டும் என்றால் சாதாரணமாக ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை செலவாகிறது.இதைக் கருத்தில் கொண்டு, விஐ வழங்கும் இந்த ரீசார்ஜ் அடிப்படையிலான மொபைல் திருட்டு மற்றும் இழப்பு காப்பீட்டுத் திட்டம் மிகவும் சிக்கனமான தேர்வாக அமைந்துள்ளது.

இது ரூ.61 (30 நாட்கள்), ரூ.201 (180 நாட்கள்) மற்றும் ரூ.251 (365 நாட்கள்) என மூன்று விதமான ரீசார்ஜ் பேக்குகளில் கிடைக்கிறது. இதில் டேட்டா நன்மைகளுடன் சேர்த்து, மொபைல் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ ரூ.25,000 வரை காப்பீடு வழங்கப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரீசார்ஜ் பேக்குகளுடன் இந்த காப்பீட்டுத் திட்டத்தை இணைப்பதன் மூலம், அதிக பிரீமியம் தொகையைத் தவிர்க்கவும், எளிதாக அனைவருக்கும் காப்பீடு கிடைக்கவும் விஐ வழிவகை செய்துள்ளது.

தனியாக இன்சூரன்ஸ் எடுப்பதற்கு ஆகும் அதிக செலவை இது குறைக்கிறது. ரீசார்ஜ் கட்டணத்தோடு சிறிய தொகையைச் செலுத்தினாலே போதுமானது.மேலும், இன்சூரன்ஸ் க்ளெய்ம் செய்யும் நடைமுறையையும் விஐ எளிதாக்கியுள்ளது. சிக்கலான வழிமுறைகளுக்குப் பதிலாக, டிஜிட்டல் முறையில் விரைவாகவும், குறைந்த ஆவணங்களுடனும் தீர்வு காணும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தனியாக இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் சிரமத்தை நீக்கி, ரீசார்ஜ் செய்யும்போதே பாதுகாப்பையும் வழங்குவது இதன் சிறப்பம்சமாகும்.

மேலும் படிக்க