June 30, 2018
தண்டோரா குழு
பரமக்குடியை சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த திருநங்கை சத்தியஸ்ரீ சர்மிளா(36). பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்த இவர் தான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்ததும் குடும்பத்தினர் அவரை ஒதுக்கி வைத்துள்ளனர்.இதனால், சொந்த ஊரான பரமக்குடியில் இருந்து வெளியேறிய அவர் செங்கல்பட்டு அருகே உள்ள நடராஜபுரத்தில் வசித்து வந்த மற்றொரு திருநங்கை ஆதரவு அளித்து வந்துள்ளார். இவர் பரமக்குடியில் பள்ளிப் படிப்பையும், சேலம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தவர். இதனால், வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடர அவர் விரும்பினார்.
எனினும், திருநங்கைகளுக்கு அங்கீகாரம் கிடைத்த பிறகே அந்தப் பணியில் இணைய வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுடன் கடந்த 11 ஆண்டுகளாக காத்திருந்தார்.இந்நிலையில்,இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞர் பணியை தொடர்வதற்காக பதிவு செய்யவுள்ளார். இதன் மூலம் இந்த பார் கவுன்சிலில் பதிவு செய்த முதல் திருநங்கை என்ற பெருமைக்கு சொந்தக்காரரான சத்தியஸ்ரீ, இன்று வழக்கறிஞராக பொறுப்பேற்றார்.