• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் பிரதமராக இரண்டாம் முறையாக பதவியேற்றார் நரேந்திர மோடி !

May 30, 2019 தண்டோரா குழு

நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பதவியேற்றார்.

நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதில், பா.ஜ., 303 எம்.பி.,க்களை பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. சிவசேனா, சிரோண்மனி அகாலிதள், ஐக்கிய ஜனதா தளம், லோக்ஜனசக்தி மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மொத்தம் 50 எம்.பி.,க்களை வென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து , தே.ஜ., கூட்டணியின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையில், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் உரிமை கோரினார் பிரதமர் மோடி. ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். இதையடுத்து இன்று ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவன் தர்பார் மண்டபத்தில் நடந்த விழாவில் இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமானம் செய்து வைத்தரார்.

மேலும் படிக்க