• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியர் ஒருவர் நடத்திய கடத்தல் நாடகம் அம்பலம்

March 24, 2017 தண்டோரா குழு

செர்பியா நாட்டில் இந்தியர் ஒருவர் கடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக வந்த மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்க்கு தகவல் கிடைத்தது. ஆனால் அந்த சம்பவம் உண்மையில்லை என்றும் அந்த நபரே அந்த கடத்தல் நாடகத்தை நடத்தியுள்ளார் என்றும் அவர் கண்டுபிடித்துள்ளார்.

வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் பிரச்சனையில் சிக்கிகொண்டால், அவர்களுக்கு உதவ மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எப்பொழுதும் முன் வருவார் என்பது அனைவருக்கும் அறிந்ததே.

சில தினங்களுக்கு முன், சுஷ்மா ஸ்வராஜின் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்திற்கு ஒருவர் உதவி கேட்டு தகவல் கொடுத்துள்ளார். அதில், “செர்பியா நாட்டிலிருக்கும் என் சகோதரை கடத்தி, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணத்தை தரவில்லை என்றால் அவனை கொன்றுவிடுவதாக கூறியுள்ளனர். என் சகோதரனை காப்பாற்றுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் அதில் ஒருவர் கைகள் கட்டப்பட்டு, அவரை லத்தியால் அடிப்பது போன்ற காணொளி காட்சியையும் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை கூறுகையில்

“இச்சம்பவம் தொடர்பான அனைத்து உண்மைகளும் எனக்கு கிடைத்துள்ளது. உங்கள் சகோதரனை யாரும் கடத்தவில்லை. அந்த கடத்தல் நாடகத்தை அவரே நடத்தியுள்ளார். மேலும், அந்த காணொளியும் பொய்யானது .உங்கள் சகோதரன் வினய் மகாஜன் கண்டுப்பிடிக்கப்படுள்ளார். அவர் செர்பிய நாடு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த பிரச்சனைக்கு அவரை அனுப்பிய ஏஜென்ட் தான் காரணம்” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க