• Download mobile app
30 Aug 2025, SaturdayEdition - 3489
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியப் பிரபலங்களின் பாராட்டைப் பெற்ற அனந்த் அம்பானி.

April 12, 2016 ndtv.com

டிவிட்டர் என்னும் சமுக வலைத்தளத்தில் இன்று அதிகமாக பேசப்படும் அம்பானி குடும்பத்தின் நபர் முகேஷ் அம்பானியோ அல்லது அணில் அம்பானியோ அல்ல.

அந்தப் பிரபல நபர் அனந்த் அம்பானி(21) தான். இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆவர். இதற்குக் காரணம் 18-மாதங்களில் 108 கிலோ உடல் எடையைக் குறைத்தால் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். டோனி மற்றும் பாலிவுட் நடிகரான சல்மான் கான் போன்றோரின் பாராட்டுதலைப் பெற்றுள்ளார்.

கடந்த ஐ.பி.எல் போட்டியின் பொது மிகப் பருமனாக இருந்த அனந்த் அம்பானி இந்தாண்டு ஏப்ரல் 9ம் தேதி வந்த பிறந்தநாளுக்குள் தனது எடையை குறைத்துக் காட்டுவேன் எனச் சபதமேற்றார். அதன்படி இந்தாண்டு உடல் எடையைக் குறைத்து மிகவும் ரம்மியமான தோற்றத்தில் காட்சியளிப்பதாகும் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த உடல் எடைக்கு அவர் சிறு வயதில் எடுத்துக்கொண்ட அதிக மாத்திரைகள்தான் காரணம் எனவும் தற்போது நாள் ஒன்றிற்கு 20 கிலோமீட்டருக்கு மேல் ஓடியும் உடற்பயிற்சி செய்தும் உடல் எடையைக் குறைத்ததாக அனந்த் அம்பானி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அனந்த் அம்பானியை இவ்வாறு பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், 18 மாதங்களில் 108 கிலோ உடல் எடையைக் குறைப்பதற்கு அதிக மன வலிமை தேவை என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் தன்னுடைய சமுக வலைத்தளமான த்விட்டேர் தெரிவித்தார்.

அதே போல அனந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டு, ஒழுக்கம் மற்றும் மன உறுதியினால் உடல் எடையைக் குறைத்ததினால் அனந்த் அவருக்கே ஒரு பெரிய பரிசைக் கொடுத்துக்கொண்டதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி கூறினார்.

மேலும் படிக்க