• Download mobile app
31 Oct 2025, FridayEdition - 3551
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியன் வங்கியின் எம்எஸ்எம்இ வளர்ச்சி தற்போது 16-17% வரை உயர்ந்துள்ளது – இந்தியன் வங்கி சி.இ.ஓ பினோத் குமார்

October 31, 2025 தண்டோரா குழு

கோவை தாஜ் விவாண்டா ஹோட்டலில் இந்தியன் வங்கியின் களப் பொது மேலாளர் அலுவலகம் சார்பில் எம்எஸ்எம்இ (சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்) முகாம் நடைபெற்றது.

இம்முகாமில்,இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான பினோத் குமார், கோவை கள பொது மேலாளர் பி.சுதா ராணி, கோவை மண்டல மேலாளர் வெங்கடரமணா ராவ் சி.எச், துணை மண்டல மேலாளர் அமீருல்லா ஜவாஹிர் கே.எம், மற்றும் சிறப்பு விருந்தினராக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆர்எம்ஓ டாக்டர் வாசு தேவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இம்முகாமில் மொத்தம் ரூ.950 கோடி ரூபாய்க்கும் மேல் எம்எஸ்எம்இ கடன்களுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒரே கூரையின் கீழ் அனைத்து கடன்களுக்கும் இவ்வளவு பெருந்தொகைக்கு அங்கீகாரம் வழங்கியது ஓர் புதிய சாதனை நிகழ்வாகும்.

தொடர்ந்து முகாமில் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான பினோத் குமார் பேசியதாவது:

இந்தியன் வங்கி நாடு முழுவதும் தொடர்ந்து இதுபோன்ற எம்எஸ்எம்இ முகாம்களை நடத்தி வருகிறது. தமிழ்நாடு குறிப்பாக கோவை எம்எஸ்எம்இ துறையின் முக்கிய மையமாக இருக்கிறது.இந்தியன் வங்கியின் எம்எஸ்எம்இ வளர்ச்சி தற்போது 16-17% வரை உயர்ந்துள்ளது. எங்கள் வங்கியின் முழு கடன் தொகுப்பில் எம்எஸ்எம்இ பங்கு 14% ஆக உள்ளது; இதை 17% வரை உயர்த்துவதே எங்கள் இலக்கு.

வாடிக்கையாளர்கள் கிளைக்கு வராம லேயே வீட்டில் இருந்த படியே கடன் பெறும் வகையில் 14 புதிய டிஜிட்டல் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முகாமில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்களும் இந்தியன் வங்கி ஆற்றிவரும் சிறந்த சேவைகளைக் குறிப்பிட்டு பாராட்டுத் தெரிவித்தனர்.
மேலும் முகாமில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் பயன்பாட்டிற்காக 10 வீல் சேர்கள் இந்தியன் வங்கியின் பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி மூலம் வழங்கப்பட்டன. அவற்றை நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான பினோத் குமார் வழங்க, இருப்பிட மருத்துவ அலுவலர் (ஆர்எம்ஓ) டாக்டர் வாசுதேவன் பெற்றுக்கொண்டார்.

மேலும் படிக்க