August 29, 2018
தண்டோரா குழு
கோவை தனியார் ஹோட்டலில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் 5 கிலோ LPG சிலிண்டர் மற்றும் வணிகமுறை இஸ்திரி பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சித்தார்தன்இவ்விழாவில் கலந்து கொண்டு5 கிலோ LPG சிலிண்டர் மற்றும் இஸ்திரி பெட்டியை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது பேசிய அவர்,
இந்த 5 கிலோ சிலிண்டர் மற்றும் இஸ்திரி பெட்டி வணிக ரீதியாக தொழில் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிசதமாக அமையும். இதனால் நேரம் மிச்சமாவதுடன்,பொருளாதார ரீதியாகவும் பலன் கிடைக்கும். 5கிலோ எரிவாயு சிலிண்டர் இஸ்திரி தொழிலுக்கு மட்டும் அல்லாமல் சுற்றுலா செல்பவர்களுக்கும்,வெளியூர் செல்பவர்களுக்கும்,லாரி ஓட்டுநர்களுக்கும் சமையல் செய்வதற்கும் உபயோகமாக இருக்கும் என தெரிவித்தார்.மேலும் பயன்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
விழாவில் 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களை பயன்படுத்தி தொழில்முறை இஸ்திரி பணியை மேற்கொள்வது பற்றிய செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்வில் இந்தியன் ஆயில் பொது மேலாளர் சௌகான்,கோவை விநியோகஸ்தர் சங்க தலைவர் நாகராஜ்,தென்மண்டல கார்பரேட் பொது மேலாளர் சபீதா நடராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.