• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியக் கடற்படைக் கப்பலில் சிறிய தீ விபத்து

January 11, 2017 தண்டோரா குழு

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் பிரளயா என்னும் போர்க் கப்பலில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 1௦) சிறிய தீ விபத்து ஏற்பட்டது. எனினும், உயிர்ச் சேதம் ஏதும் இல்லை.

இச்சம்பவம் குறித்து இந்திய கடற்படையின் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

“இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் பிரளயா போர்க் கப்பல் மும்பை கப்பல் பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கப்பலின் ஒரு பகுதியில் தீடீரென்று தீ பிடித்தது. உடனே, கப்பல் தீய|ணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. வெல்டிங் பணி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்” என்றார்.

கடந்த வருடம் டிசம்பர் 5ம் தேதி, 3,800 டன் எடையுடைய “பிரம்மபுத்ரா ஐஎனஎஸ் பெட்வா” என்னும் போர்க் கப்பல், அதே கப்பல் துறையில் இருந்து வெளியே வரும்போது வழுக்கி அருகிலிருந்த காய்ந்த பகுதியில் சாய்ந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு மாலுமிகள் உயிரிழந்தனர். 14 காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க