• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தாண்டு கிறிஸ்துமஸ் விழா தனித்துவம் மிக்கதாக இருக்கும் – பேராயர் டிமோத்தி ரவீந்தர்

December 23, 2020 தண்டோரா குழு

இந்தாண்டு கிறிஸ்துமஸ் விழா தனித்துவம் மிக்கதாகவும் மக்களுக்கு ஆற்றலை கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று கோவை சி.எஸ்.ஐ திருமண்டல பேராயர் டிமோத்தி ரவீந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கொரோனா அச்சுறுத்தலா கடந்த 10 மாதங்களாக நிறைய சிரமங்கள் அடைந்துள்ளோம்.ஈரோடு சி.எஸ்.ஐ மருத்துவமனை மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.இந்த பொதுமுடக்க காலத்தில் கோவை, நீலகிரி கிருஷ்ணகிரி உட்பட 8 மாவட்டங்களிலும் எவ்வித வேறுபாடுமின்றி மக்களுக்கு 50 ஆயிரம் உணவு பொட்டலங்களை வழங்கியுள்ளோம்.நிதி இடர்பாடுகள் உள்ள ஆலயங்களுக்கு நிதி உதவி செய்துள்ளோம். அரசின் நிலையான வழிகாட்டு முறைகளின் படி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட உள்ளது.கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த கிறிஸ்துமஸ் ஒரு புதிய மற்றும் தனித்துவம்மிக்க கிறிஸ்துமஸாக இருக்கும்.

பெத்தலகேத்தில் இயேசு ஆற்றல் உடைய குழந்தையாக பிறந்து மற்ற ஆற்றல் இல்லாத குழந்தைகளுக்கு ஆற்றல் கொடுத்தார்.அந்த வகையில் மக்களுக்கு ஆற்றல் கொடுக்கும் இந்த கிறிஸ்மஸ் பண்டிகை. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது அனைத்து தேவலாயங்களிலும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.1000 சதுர அடியில் 20 பேர் நின்று ஆராதனைகள் நடைபெற வேண்டும். வழக்கமாக 24ம் தேதியே தொடங்கு 27 வரை நீடிக்கும். ஆனால், இந்தாண்டு ஒன்று அல்லது இரண்டு கிறிஸ்துமஸ் ஆராதனைகள் மட்டுமே நடைபெற உள்ளது. தீபாவளி பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடினோம். அதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையை வேறுபாடு இல்லாமல் கொண்டாடுவோம். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றார்.

மேலும் படிக்க