March 10, 2021
தண்டோரா குழு
நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் அப்டேட் தொடர்பாக சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் கிளம்பி வருகிறது.இது தொடர்பான பல்வேறு வேடிக்கையான சம்பவங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வந்தன.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், ஒரு வித்தியாசமான முறையில் வலிமை அப்டேட் என்கிற பெயரில் வாக்களிப்பதன் அவசியத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளார்.
அதில், “இதோ வலிமை அப்டேட்.. இதையும் ஒரு update ஆக எடுத்து நேர்மையான முறையில் vote போடுங்க” என்று கேப்ஷன் போட்டுள்ளார்.
அதில், “வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021-ல் வாக்களியுங்கள். ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது. 100% ஓட்டுதான் இந்தியர்களின் பெருமை.” என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல்கள் குறித்து புகார் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளது.