• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இது கருப்பு மண் அல்ல.காவி மண்- பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

March 23, 2018 தண்டோரா குழு

இது கருப்பு மண் அல்ல காவி மண்என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதனை கண்டித்து பாஜக சார்பில் கோவையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது தொண்டர்கள் மத்தியில்பேசிய தமிழிசை செளந்தரராஜன்,

கோழைகளாக பா.ஜ.க மாவட்ட தலைவர், பா.ஜ.க அலுவலகத்திலும் குண்டு வீசுபவர்கள் இப்போது நேரில் வாருங்கள். யார் எரிகின்றார்கள் என பார்க்கலாம். தமிழகத்திலும் ராமராஜியம் நிச்சயம் வரும்.  சி.ஆர்.பி.எப் சரக்கு போட்டுட்டு பெரியார் சிலையுடன் சண்டை போட்டு இருக்கின்றார். ஸ்டாலின் திமுக விற்கே தலைவராக முடியவில்லை, முதல்வராக முடியுமா ?செயல் முதல்வராக வேண்டுமானால் ஸ்டாலின் வரலாம்.  கோவையில் குண்டுகள் வெடிக்கின்றது.7ம் தேதி குண்டு வெடித்த போதே காவல் துறை நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது நடந்திருக்காது.எத்தனை குண்டுகள் வெடித்தாலும் பா.ஜ.க தொண்டனை ஒன்றும் செய்ய முடியாது. இது கருப்பு மண் அல்ல.காவி மண்.ராமரதத்திற்கு உள்ள வரவேற்பை போல பா.ஜ.கவிற்கும் வரவேற்பு இருக்கின்றது.எந்த நேரத்திலும் தேர்தல் வந்தாலும் அதைக் சந்திக்க பாஜக தயார். ஒரு பாஜக  கவுன்சிலர் கூட இல்லாத திரிபுராவில் கடுமையான உழைப்பால் வெற்றி பெற்றுள்ளோம்.அதேபோல் தமிழகத்திலும் ஆட்சியைக் பிடிப்போம். இதனால் தான் ஸ்டாலின் பயப்படுகிறார்.

இதுவே பாஜகவினர் மீது கடைசி தாக்குதலாகக் இருக்கட்டும்.தமிழ்நாட்டில் பெரும்பான்மையோனர் இந்துக்கள் வசிக்குறோம்.அதனால் எந்த தெருவிலும் விநாயகர் சிலையைக் கொண்டுபோவோம் .அதைக் அரசும் தடுக்கமுடியாது ,காவல்துறையும் தடுக்க முடியாது.குண்டுகள் வீசினால் நேரடியாக வாருங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம்.தமிழகத்தில் ஆட்சியைக் பிடிக்கமால் விடமாட்டோம்.ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இரத்தம் கொடுப்பவர்கள்.இரத்ததைக் எடுப்பவர்கள் அல்ல.தமிழகத்தில் பாவிகள் ஆளும் போது.காவிகள் ஏன் ஆளக்கூடாது.பாஜகவினர் மீது இனி யாரும் கைவைக்ககூடாது..அப்படி வைத்தால் கை இருக்காது.ஐ.எஸ். இயக்கத்தில் சேரச் சொல்லி குறுஞ்செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

 

மேலும் படிக்க