March 26, 2018
தண்டோரா குழு
நடிகர் விஷால் நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.
இந்நிலையில்,தற்போது டிஜிட்டல் கட்டணம், தியேட்டர் டிக்கெட் கணினி மயமாக வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் அருள்நிதி விஷாலிடம் சரமாரியாக பல கேள்விகள் கேட்டுள்ளார். இவர் தனது ட்விட்டர் பதிவில், “நீங்கள் வேலைநிறுத்தம் செய்யாமலேயே பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்திருக்கலாமே⁉ இதற்காக தான் உங்களை பதவியில் உட்காரவைத்தார்கள்” என கூறியுள்ளார்.