• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘இதயங்கள் அறக்கட்டளை’ ஐந்தாம் ஆண்டு விழா : ஏழை குழந்தைகளுக்கு உதவுவதற்கு பாராட்டு விழா

May 30, 2022 தண்டோரா குழு

‘இதயங்கள் அறக்கட்டளை’ ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் வரலொட்டி ரெங்கசாமி எழுதிய அன்பே சக்தி புத்தக அறிமுக விழா அவிநாசி ரோட்டில் உள்ள ‘சிட்ரா’ கலை அரங்கில் நடந்தது.

‘தினமலர்’ நிறுவனத்தின் இணை இயக்குனர், இரா. லட்சுமிபதி தலைமை வகித்து பேசுகையில்,

“‘டைப் 1’ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு உதவும் வகையில் இதயங்கள் அறக்கட்டளை அதன் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தலைமையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடைய பணி மிகவும் பாராட்டத்தக்கது.

எதிர்வரும் ஆண்டுகளிலும் மேலும் பல ஏழை குழந்தைகளுக்கு மருத்துவ உதவி தொடர வேண்டும் என வாழ்த்துகிறோம்.தொடர்ந்து வரலொட்டி ரெங்கசாமி எழுதிய அன்பே சக்தி புத்தகத்தை அறிமுகம் செய்துவைத்து வாழ்த்தி பேசினார்.நிகழ்ச்சியில் இதயங்கள் அறக்கட்டளைக்கு உதவி வருபவர்கள் அனைவரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

‘இதயங்கள் அறக்கட்டளை’ நிறுவனத் தலைவர் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர், டாக்டர். கிருஷ்ணன் சுவாமிநாதன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மேலும் படிக்க