October 5, 2018
தண்டோரா குழு
சீனாவில் மாயமான இண்டர்போல் தலைவரை பிரான்ஸ் போலீசார்தேடி வருகின்றனர்.
சர்வதேச அளவில் நடைபெறும் விசாரணைகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இன்டர்போல் (Interpol) அமைப்பின் தலைவராக சீனாவைச் சேர்ந்த மெங், 2016-ம் ஆண்டு நவம்பரில் தேர்வு செய்யப்பட்டார். சீனாவில் துணை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். இண்டர்போல் தலைவராக இருப்பதன் காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் சொந்த நாடு சென்ற அவரை, செப்.,29 முதல் தொடர்பு கொள்ள முடியவில்லை என அவரது மனைவி புகார் அளித்துள்ளார். இதையடுத்து,இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியிருப்பதாகப் பிரான்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் இது குறித்து கருத்து தெரிவிக்க இண்டர்போல் அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
கடந்த 2016 ல் இண்டர்போல் தலைவராக தேர்வான மெங் ஹோங்வெயி பதவிக்காலம் 2020வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.