• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இண்டஸ் டவர்ஸ் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் இணைந்து ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

March 19, 2024 தண்டோரா குழு

தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை வழங்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான இண்டஸ் டவர்ஸ் லிமிடெட், அதன் முதன்மையான கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) திட்டம் சக்ஷம்-ன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு அரசு பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளிகளில் ‘ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது.

NIIT அறக்கட்டளையுடன் இணைந்து இந்த திட்டம், மாணவர்களுக்கு டிஜிட்டல் மற்றும் IT திறன்களை கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கு அவர்களின் கற்பித்தல் முறைகளில் டிஜிட்டல் கருவிகளை திறம்பட ஒருங்கிணைக்க உதவுகிறது. மாணவர்கள் கல்வியை ஈடுபாட்டுடன் கற்க உதவுகிறது.

இந்த முயற்சியை நீலகிரி கூடுதல் ஆட்சியர் அலுவலகம், ஃபிங்கர்போஸ்ட், ஊட்டியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர், எம். அருணா, ஐ.ஏ.எஸ்., தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் மாவட்ட ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி தமிழ்மணி ஆகியோர் உடனிருந்தனர்.

டிஜிட்டல் இந்தியாவுடன் இணைந்த இந்தத் திட்டம், குழந்தைகளுக்கு அவர்களின் பாடங்களுடன் சேர்த்து கூடுதல் வாய்ப்புகளை வழங்கி டிஜிட்டல் கருவிகள் பற்றிய அவர்களின் அறிவை மேம்படுத்த உதவுகிறது. இந்த ஸ்மார்ட் வகுப்பறையில் கணினி, எல்இடி ஸ்மார்ட் தொலைக்காட்சி, ப்ரிண்டர் மற்றும் டிஜிட்டல் கல்வி தரவுகளை கொண்ட ஆண்ட்ராய்டு பாக்ஸ் ஆகியவை இருக்கும். இந்த திட்டம் மேலும் பயிற்றுவிப்பாளர்களுக்கு ஆலோசனை, பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கி, அவர்களின் டிஜிட்டல் கருவிகளை இயக்கும் திறனை மேம்படுத்துகிறது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் எம்.அருணா, ஐ.ஏ.எஸ்., பேசுகையில்,

”இந்தப் பள்ளிகளில், புதிய தொழில்நுட்பங்களை இணைத்து மாணவர்களின் கற்றல் மாதிரிகளை உயர்நிலைக்கு கொண்டு செல்வதுடன் ஆசிரியர்களின் திறனையும் மேம்படுத்தி, சிறந்த டிஜிட்டல் கல்வியை வழங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். ஸ்மார்ட் கிளாஸ்ரூம் திட்டத்துடன் அரசுப் பள்ளிகளை மறுவடிவமைப்பதில் இண்டஸ் டவர்ஸின் சிஎஸ்ஆர் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம்” என்றார்.

இண்டஸ் டவர்ஸ் லிமிடெட், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சர்க்கிள் சிஇஓ நிசார் முகமது கூறுகையில்,

“தனது CSR முயற்சிகளின் ஒரு பகுதியாக, இண்டஸ் டவர்ஸ் இந்தியாவின் பல பகுதிகளில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ‘ஸ்மார்ட் கிளாஸ்ரூம் திட்டத்திற்காக’ நீலகிரியுடன் இணைவது நிறுவனத்திற்கு பெருமையாகும். கல்வியின் முக்கிய பங்கைப் புரிந்துகொள்வதன் மூலம், நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் டிஜிட்டல் மற்றும் ஆக்கப்பூர்வமான கல்வியறிவு அடிப்படை என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

எல்லாவற்றையும் உள்ளடக்கிய டிஜிட்டல் கற்றல் தீர்வு மூலம் மாணவர்களை மேம்படுத்துவதில் எங்கள் கவனம் உள்ளது. கற்பித்தல்-கற்றல் செயல்முறையையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார்.

பள்ளிகள் மாவனல்லா, முக்கட்டி, அய்யன்கொல்லி, கப்பல, பொன்னானி, தொரப்பள்ளி ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.

மேலும் படிக்க