• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இணை அமைச்சர் ராஜினாமா செய்ததால் மாநிலங்களவை எம்.பி.யாகிறார் பாஸ்வான் ?

December 10, 2018 தண்டோரா குழு

இணை அமைச்சர் குஷ்வாஹா பதவி விலகியதால் ராம் விலாஸ் பாஸ்வான் கூடுதல் தொகுதிகளுடன் மாநிலங்களவை எம்.பி.யாகிறார்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இணை அமைச்சராக இருக்கும் ராஷ்டரிய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திரா குஷ்வாஹா தனது இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீகார் மாநிலத்தில் செல்வாக்குபெற்ற ராஷ்டரிய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திரா குஷ்வாஹா. இவர் மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மனிதவள மேம்பாட்டு துறை இணை மந்திரியாக பதவி வகித்து வந்தார். இவருடன் சேர்த்து பாராளுமன்ற மக்களவையில் இந்த கட்சிக்கு மூன்று உறுப்பினர்கள் உள்ளனர்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பாக பா.ஜ.க.வுடன் உபேந்திரா குஷ்வாஹா நடத்திய பேச்சுவார்த்தையில் ராஷ்டரிய லோக் சமதா கட்சிக்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கு இடங்கள் ஒதுக்கப்படவில்லை என தெரியவருகிறது. இந்நிலையில், உபேந்திரா குஷ்வாஹா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் பாஸ்வானுக்கு ஒதுக்குவதாக இருந்த இரண்டு தொகுதிகளை விட அதிமாக ஐந்து தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், இத்துடன் பாஸ்வானை மாநிலங்களவையின் எம்பியாகவும் பாஜக அமர்த்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க