• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இணைய வழி மூலம் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்த வேளாண் பல்கலைகழக மாணவி !

May 13, 2020 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவி சினேகா பாட்டில்,பயிர் நோயியல் துறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அவரது முனைவர் பட்ட படிப்பிற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தார். அவர் தனது ஆய்வுக் கட்டுரையை “தக்காளியில் ஸ்ட்ரெப்டோமசைன் வளர்சிதை மாற்றத்தின் எதிர்ப்பு மற்றும் உணர்திறன் மற்றும் நோய் மேலாண்மைக்கான உத்திகள்” என்ற தலைப்பில் சமர்ப்பித்தார்.

கொரோனா தொற்று நோய் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக மாணவி சினேகா தனது ஆராய்ச்சி முடிவுகளை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெறுவதற்கு பல மாதங்கள் ஆகும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். இச்சமயத்தில் இன்று மாணவி சினேகா அவரது ஆய்வுக்கட்டுரை முடிவுகளை இணைய வழி வாயிலாக பல்கலைக்கழக துணைவேந்தர், ஆராய்ச்சி ஆலோசகர்கள், வகுப்பு தோழர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் அவரது ஆராய்ச்சி முடிவுகளை விளக்கினார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த விளக்க காட்சிக்குப் பிறகு,அவருடைய ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆராய்ச்சிக் குழுவானது மாணவி சினேகாவை முனைவர் பட்டம் பெற்றவராக அறிவித்தனர்.

இது குறித்து மாணவி சினேகா கூறுகையில்,

இதை ஒரு நாளும் என் வாழ்வில் நான் கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை. எனது வாழ்நாளில் ஒரு மிக முக்கியமான நிகழ்வு இது என்று பூரிப்படைந்தார்.இருப்பினும் எனது கல்லூரி வாழ்வின் கடைசி காலாண்டை எனது நண்பர்களுடன் அனுபவிக்க முடியாமலேயே எனது கல்லூரிக்காலம் நிறைவடைந்து விட்டது. இது எனக்கு சிறிது வருத்தமாக உள்ளது.

தற்போது அந்த மாணவி வெற்றிகரமாக முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க