• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இணையவழியில் வரும் 27ம் தேதி விவசாயிகள் முறையீட்டுக்கூட்டம் ஆட்சியர் தகவல்

August 24, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வரும் வெள்ளிக்கிழமை (27ம் தேதி) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை துறை அலுவலர்களை கொண்டு இணையவழியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறவுள்ளது என ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

கோவை மாவட்ட விவசாயிகள், விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கைகளை இணைய வழியாக தெரிவித்து தீர்வு காணும் வகையில் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் அந்தந்தப் பகுதியிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை (27ம் தேதி) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் சென்று பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி விவசாயிகள் நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பிரச்சினைகளை விண்ணப்பங்களாக வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலமாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க