May 25, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தினால் நான்காவது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பால்,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவச பொருட்கள் கிடைக்காமல் பேருந்து வசதிகளும் இல்லாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்தி வந்த போராட்டம் கடந்து மூன்று நாட்களாக உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.போலீசின் துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர் மேலும் தொடரும் கலவரத்தால் காவல்துறையினருக்கு பயந்து பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர்.
துத்துக்குடியில் உள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடைகள் மூடிக்கிடப்பதால் பால், தண்ணீர்,காய்கறிகள் போன்ற அத்தியாவசப் பொருட்கள் கூட வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.மேலும் தூத்துக்குடியில் மின்சாரம் மற்றும் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.