• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இணைந்தது ஐடியா-வோடஃபோன் நிறுவனம்!

March 20, 2017 தண்டோரா குழு

வோடா‌ஃபோன் நிறுவனத்துடன் ஐடியா செல்ஃபோன் நிறுவனம் விரைவில் இணைய உள்ளது.

பிரபல மொபைல் சேவை நிறுவனமான ஐடியா, வோடஃபோன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. வோடஃபோன் நிறுவனத்துடன் இணைய ஒப்புதல் கிடைத்துள்ளதாக இன்று மும்பையில் ஐடியா நிறுவனத்தின் இயக்குனர்கள் வாரியம் தெரிவித்துள்ளது. ஐடியாவும் வோடாஃபோனும் இணைந்தபின், அது இந்தியாவின் மிகப்பெரிய செல்ஃபோன் சேவை நிறுவனமாக உருவெடுக்கும்.

ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்களின் 43 சதவிகித பங்குகளை இணைப்பதாக அறிவித்துள்ளன. இந்த இரண்டு கம்பெனிகளின் இந்தியாவின் மொத்த வாடிக்கையாளர்களாக 4 கோடி பேர் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

இரு நிறுவனங்களும் இணைந்துள்ளதால் விரைவில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக பல சலுகைகளை அளிக்கலாம்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஏர்செல் நிறுவனத்தை வாங்க, அனில் அம்பா‌னியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஒப்பந்தம் செய்துள்ளது.

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறு‌வனத்தின் அதிரடிக்குப் பின்னர் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க