• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் – தங்க தமிழ்ச்செல்வன்

June 14, 2018 தண்டோரா குழு

இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் என தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ. க்கள் மீதான வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்நிலையில்,செய்தியாளர்களை சந்தித்த தங்கதமிழ்ச்செல்வன்,

“தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என நம்புகிறோம். எங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் நான் மட்டும் மேல்முறையீடு செய்யமாட்டேன்.நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்க முடியவில்லை.கட்சி தாவல் அடிப்படையில் எங்களை தகுதிநீக்கம் செய்யவில்லை.தீர்ப்பு சாதகமாக வந்தால் மதியமே சட்டப்பேரவைக்கு செல்வோம். இடைத்தேர்தல் வந்தால் சந்தித்து 18 பேரும் மீண்டும் வெற்றி பெறுவோம்.

மேலும்,இடைத்தேர்தலில் 18 பேரில் ஒருவர் வெற்றிபெறாவிட்டாலும் மற்ற 17 பேரும் ராஜினாமா செய்வோம் அந்த அளவிற்கு ஒற்றுமையாக உள்ளோம்”.இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க