• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு !

May 28, 2019 தண்டோரா குழு

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 13 பேரும் சபாநாயகர்முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் 23ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் 13 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.9 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், 28-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்பதாக சட்டசபை செயலகத்திடம் தி.மு.க. தெரிவித்து இருந்தது. இதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி அளித்திருந்தார்.

அதை தொடர்ந்து தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 13 பேரும் சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதையடுத்து சென்னையில் அண்ணா அறிவாலயத்தில், 13 எம்.எல்.ஏ.க்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.சட்டப்பேரவையில் திமுகவுக்கு 88 எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில் தற்போது 101-ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள்;

பூந்தமல்லி- கிருஷ்ணசாமி
பெரம்பூர்- சேகர்
திருப்போரூர்- இதயவர்மன்
திருவாரூர்- பூண்டி கலைவாணன்
குடியாத்தம்- காத்தவராயன்
ஆம்பூர்-விஸ்வநாதன்
தஞ்சாவூர்- நீலமேகம்
ஓசூர்- சத்யா
அரவக்குறிச்சி- செந்தில் பாலாஜி
ஆண்டிப்பட்டி- மகாராஜன்
பெரியகுளம்- சரவணக்குமார்
திருப்பரங்குன்றம்- சரவணன்
ஓட்டப்பிடாரம்- சண்முகையா

மேலும் படிக்க