March 14, 2018
தண்டோரா குழு
சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம் என முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கமளித்துள்ளார்.
உ.பி.யில் கோராக்பூர், புல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர் , மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர். எனவே காலியாக உள்ள இந்த இரு லோக்சபா தொகுதிகளுக்கும், பீகாரில் அரேரியா லோக்சபா தொகுதி என மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும் பீகாரில் ஜகனாபாத், பஹாபூவா என இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 11-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இதில், புல்பூர், கோரக்பூர் மக்களவை இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது.
இந்த தோல்வி குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில்,
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்கிறேன். தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்வோம். உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தியே மக்கள் ஓட்டளித்தனர். சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம் என கூறியுள்ளார்.