• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணையும் இயக்குநர் சுசி கணேசன்

January 7, 2022 தண்டோரா குழு

4 V எண்டர்டெயின்மென்ட் பிரம்மாணடமாக தயாரிக்கும் படம் ‘வஞ்சம் தீர்த்தாயடா’.இந்தப் படத்தை 80 களில் மதுரையில் நடைப்பெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்குகிறார் சுசிகணேசன்.

இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.இதற்கான ஒப்பந்தம் இன்று உறுதி செய்யப்பட்டது. இதற்காக இயக்குநர் சுசிகணேசன் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து இளையராஜாவை சந்தித்து முன் பணம் வழங்கி மரியாதை செய்தார் .

இதுகுறித்து இயக்குநர் சுசி கணேசன கூறியதாவது :

கிராமத்து வாழ்க்கையில் ஊரணி தண்ணீரைப் பருகி வளர்ந்ததைப் போல இளையராஜா சாரின் இசையையும் ஒரு ஒரு உணவாக உண்டு வாளர்ந்தவன் என்ற முறையில் எனது ” வஞ்சம் தீர்த்தாயடா ” படத்திற்கு அவர் இசையமைப்பதை பெருமையாக எண்ணுகிறேன்.

என்னுடைய முதல் படத்துக்கு இளையராஜா சார் இசை அமைக்க வேண்டும் என்றிருந்த கனவு நான் முதன் முதலாக தயாரிக்கும் படத்தில் நிறைவேறி உள்ளது.80 களில் நடக்கும் இந்த கதையில் இளையராஜா சார் இசை ‘படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக ‘இருக்கும்.
ஒரு இசை மாமேதையுடன் இந்த புத்தாண்டில் இணைந்து பணியாற்றுவது மாபெரும் கொடுப்பினை ” என்றார்.

மேலும் படிக்க